இறுதியுத்தத்தில் சிங்கள இனவெறி அரசினால் கொல்லப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களின் உடல்மீது நின்று எளுக சிறீலங்கா வென முழக்கமிடும் மனோ கணேசன்!
எழுக தமிழ் என்ற கோசத்திற்கு பதிலாக எழுக சிறீலங்கா என்பதே தற்போதைய காலத்தின் தேவையாக இருப்பதாக, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையை கண்டறிதல் தொடர்பிலான இருநாள் செயலமர்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் நான் அந்த கோரிக்கைகளை சாதகமாகவே பார்க்கின்றேன். எனினும் எழுக தமிழ் என்பதைவிட எழுக இலங்கை பிரஜைகள் என்ற கோசம் எழுப்பப்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது.
நாம் தற்போது தமிழர்களாகவோ, சிங்களவர்களாகவோ பிரிந்து செயற்பட முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகவே நாம் எதிர்ப்பார்க்கும் இலக்கை அடைய முடியும். அதனால் எழுக சிறீலங்கா பிரஜைகள் என்று கோசம் எழுப்புவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
என்பதே தற்போதைய காலத்தின் தேவையாக இருப்பதாக, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையை கண்டறிதல் தொடர்பிலான இருநாள் செயலமர்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.