ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு இன்றும் சொற்ப நேரத்தில் உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற நீதியரசர்கள் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்குள் வருகைதந்திருந்தபோதிலும் இதுவரை அவர்கள் தீர்ப்பு வழங்கும் ஆசனங்களுக்கு வருகை தரவில்லை.
உயர்நீதிமன்றத்தின் 502 ஆம் எண் அறை நிரம்பியுள்ளது. ஒவ்வொருவரும் தீர்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இன்றும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தைச்சுற்றி பலத்த பொலிஸ்மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிமன்றை நோக்கி இருதரப்பு அரசியல் பிரமுகர்கள் வந்தவண்ணமுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் நீதிமன்றின் வளாகத்திற்கு வெளியில் குவிந்து நிற்பதை அவதானிக்க முடிந்தது.
சர்வதேசத்தின் கவனம் இன்றையதினம் நீதிமற்றை ஈர்த்துள்ளநிலையில் சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்களும் நீதிமன்றில் குவிந்துள்ளனர்.