அளுத்கடை உயர் நீதிமன்ற சுற்று வட்டாரத்தை சுற்றி விசேட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் குழுக்களுக்கும் மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் நலிந்த பெரேரா உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அடங்கிய குழுவின் முன் மனுக்களை முன்வைத்தனர்.