குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது- மஹிந்த யாப்பா அபேவர்தன

300 0

மாகாண சபைகளின்  அபிவிருத்திகளை  முன்னெடுக்க  அதிகாரங்களை  அதிகரிப்பதற்கான எவ்வித  அவசியமும்  கிடையாது.  வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாக மக்களுக்காக செயற்படுத்தினால்  அபிவிருத்திகள் மேம்படும்  என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்,

தேசிய கலாசார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய  கட்சியினர்  தங்களின்  அதிகாரங்களை தக்கவைத்துக்  கொள்ள  எந் நிலைக்கும் செல்வார்கள்,  ரணில்  மீதான நம்பிக்கை   பிரேரனை அதனை  நிரூபித்து விட்டது. மக்கள் விடுதலை முன்னணியினர் ஒன்றும் அறியாதவல்கள் போல் தற்போது விலகியுள்ளமையும் ஒரு  அரசியல்  சூழ்ச்சி.

அத்துடன் இன்று  ஐக்கிய தேசிய கட்சியினர் எம்மை  விட குறைவான பெரும்பான்மையினையே  கொண்டுள்ளனர். கூட்டமைப்பு முறையாக செயற்பட்டிருந்தால் அவர்களின் பெரும்பான்மை  103 ஆகவே   காணப்பட்டிருக்கும்.  அடுத்து அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின்   கட்டாயம் ஒரு  கட்சியுடன்  ஐக்கிய தேசிய  கட்சி கூட்டணியமைக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு  எதிர்க்கட்சி  பதவியை  ஒருபோதும் விட்டுக்  கொடுக்க மாட்டார்கள் ஆகவே குறைவான பெரும்பான்மையினை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை   கையளிக்குமாறு கோருவது வேடிக்கையானது என்றார்.

Leave a comment