ரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே – தினேஸ்

351 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

ஐ.தே.க வின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் 103 மாத்திரம் தான் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பிரனர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நேற்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

117 வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டாலும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையாது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 14 வாக்குகள் அடங்கியுள்ளது.

இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவுக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவு 103 ஆக குறைவடைந்துள்ளது.

மனோ கணேசன், திகாம்பரம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்தும், 103 உறுப்பினர்களின் ஆதரவே ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது.

அவ்வாறாயின் பெரும்பான்மை இல்லை என்பது இதனூடாக தெளிவாகின்றது என தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment