தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக, சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.
சிறீலங்கா அமைச்சில் நேற்று முன்தினம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சிறீலங்கா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் புதிய சவால்கள் தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.அத்துடன், தேசிய பாதுகாப்புத் தொடர்பாக ஏனைய அமைச்சர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன கெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முப்படைகளினதும் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் செயலர்களும் கலந்துகொண்டனர்.