நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அதிபரும், உலகின் மிகசிறப்புக்குரிய நோபல் பரிசு பெற்றவருமான இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ்(93) இன்று மரணம் அடைந்தார்.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஷிமோன் பெரஸ். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் அமைந்த பல்வேறு அமைச்சரவைகளில் இடம்பெற்றதுடன், பிரதமராகவும் பதவி வகித்தார். இவருக்கு 1994-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஷிமோன் பெரசுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. டெல் அவிவ் அருகே உள்ள ஷேபா மருத்துவ மையத்தில் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஷேபா மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணம் அடைந்தார்.