புரவசி பலய´ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்கள் தொடர்பில் கிடைக்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ஜனாதிபதி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.