ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு நாளை பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு 117 பேர் ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி நாளைய பிரேரணைக்கு ஆதரவு வழங்காது என எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது.
பாராளுமன்றத்திலுள்ள 225 பேர் என்பது, இந்த நாட்டிலுள்ள முழு மக்கள் தொகையையும் குறிக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 225 பேர் சொன்னாலும் கேட்கமாட்டேன் எனக் கூறுவது, முழு நாட்டு மக்களையும் மதிக்க மாட்டேன் என்பதற்கு சமனாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன தெரிவித்துள்ளார்.