நாட்டில் ஸ்திரமானதொரு அரசாங்கம் இல்லாத நிலை தொடருமாக இருந்தால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் பொறுப்புக்களை வகிப்பதற்கான வாய்ப்புக்கள் வந்துள்ளன. எனினும் அவற்றைத் தொடர்ந்து மறுத்து வருகின்றேன்.
காரணம் தற்போது காணப்படுகின்ற ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது இயலாத காரியமாகும். எனவே பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் உறுதியான அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
அரசியல் குழப்பநிலை ஏற்பட்டமையை தொடர்ந்து நீதிக்கான குரல் எனும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.