நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க ரவியின் விளக்கம்

306 0

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பொருளாதாரம் பாதாளத்தில் சென்றுள்ளது. இந்த நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் 2019 ஆண்டுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்திற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்க வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இந்தியா மற்றும் சிங்கப்பூர்வுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் எவ்விதத்திலும் நாட்டுக்கு பாதகமாக அமையாது என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் எட்கா உடன்படிக்கைகள் போன்றவற்றை தடைசெய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இவ்வாறான ஒப்பந்தங்கள் நாட்டுமக்களின் எதிர்காலம் பற்றி சந்திக்காமல் மேற்கொள்ளப்டவதில்லை. இந்த ஒப்பந்தங்களின் உண்மையினை அறிந்துக்கொள்ளமால் பயங்கொள்பவர்கயே தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆகவே சிங்ப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு ஒப்பந்தம் தொடர்பில் சாதகமான அறிக்கையினையே முன்வைக்கும் என்றார்.

Leave a comment