நாட்டின் எதிர்கால பயணம் தொடர்பில் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பை விரைவாக பெற்றுத் தருவது அவசியமாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தமக்கு நீதிமன்றத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் கிடையாது. மேல் உள்ள கடவுளிடம் தான் அதனைக் கேட்டுப் பிரார்த்திக்க முடியும். ஜனாதிபதி முன்னெடுத்த பாராளுமன்றத்தைக் கலைக்கும் நடவடிக்கைக்கு சார்பான தீர்ப்பு வருமாக இருந்தால், ஜனவரிக்கு 01 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு இடைக்கால நிதி பிரேரணையொன்றை ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் முன்வைக்க முடியும்.
அவ்வாறில்லாது இருந்தால், பாராளுமன்றத்தில் ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.