சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக சில நாடுகள் உத்தியோகபூர்வமாக உதவ முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளே, சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்கு உதவியளிக்க முன்வந்துள்ளன.
அந்தந்த நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இது தொடர்பான உறுதிமொழியை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நான்கு நாடுகளும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக சந்தையை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு உருவாக்கிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால், அந்த அமைப்பினூடாக கொடுக்கல் வாங்கல்களின் போது வட்டி விகிதங்கள் ஒரு பரிமாற்றம் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் கடன் தொகை 8500 பில்லியன் எனவும், அதில் 42 வீதம் வெளிநாட்டுக் கடனெனவும், அதனை மீளச் செலுத்துவது தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.