தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வழியுருத்தி இலங்கை தொழிலாளர் காங்ரசினால் மேற்கொள்ளபட்ட ஆர்பாட்டமானது ஆறாவது நாளாவும் .ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ லெச்சுமிதோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேயிலை தொழிற்சாலையின் பிரதான வீதியின் தொழிற்சாலைக்கு முன்பாக டயர்களை எரித்தும் தோட்ட கம்பணிகள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வழங்க வேண்டும் என வளியுருத்தி பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்ட மக்கள் கலுத்து தெரிவிக்கையில்,
பொகவந்தலாவ நகரில் ஒரு கொழுந்து ஆர்ப்பாட்டதை முன்னெடுத்த போதே நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரனங்கள் முதல் பாதனி வரை அனைத்தையும் பெற்று கொடுத்து பொங்கல் மற்றும் வருடபிறப்பு போன்ற பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடினோம்
ஆனால் மலையக மக்களிடம் வாக்குகளை பெற்ற சில அரசியல்வாதிகள் எங்களின் போராட்டத்தை கொச்சைபடுத்துகிறனர்.
எனவே எங்களின் போராட்டத்திற்கு ஆதரவுவழங்காவிட்டால் பரவாயில்லை எங்களின் உரிமைக்காக போரடுகின்ற ஆர்பாட்டத்தை எவரும் இழிவுபடுத்த வேண்டாம் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோறிக்கை விடுத்தனர்