குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பதுளை ஆர். எச். குணவர்தன மாவத்தையில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வின் இல்லத்திற்கு முன்னால் உள்ள இல்லத்தில் நிகழ்ந்துள்ளது.

பதுளை லோவர் வீதியில் நியூசிட்டி ஸ்டோர்ஸ் உரிமையாளரும் இரு பெண் பிள்ளைகளின் தந்தையுமான தேவசகாயம் ஜெயசீலன் (54) என்பவரே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத் தற்கொலைக்கு வர்த்தக கொடுக்கல் வாங்கலிலுள்ள பிரச்சினை காரணம் என அவர் தொடர்சியாக எழுதிவந்த நாட்குறிப்பேட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர் இறப்பதற்கு முன் தனது நிலை தொடர்பாக எழுதப்பட்ட கடிதமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சில தினங்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. வர்த்த நடவடிக்கைக்குப் பின்னர் இல்லத்திற்கு வந்து தூங்கியவர்

காலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு தேங்காய் தேவையா? என்று மைத்துனர் கேட்ட போது தூக்கில் தொங்கிய விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பதுளைப் பொலிஸாரும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர்.

பிரதேப் பரிசோதனைக்காக இறந்தவரின் சடலம் பதுளை  பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.