பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூசிலாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாளை நண்பகல் அளவில் பிரதமர் நியூசிலாந்து புறப்பட்டுச் செல்வார் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ நியூசிலாந்து விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு, பொருளாதாரம், பிராந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜோன் கீயுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
நியூசிலாந்து பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கு அமைய பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.