நீதிதமன்றத்தின் தீர்ப்பு எத்தகையதாக அமைந்தாலும் அது அரசியல் குழப்ப நிலைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என நாங்கள் கருதவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மைத்திரிபால சிறிசேன மற்றம் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளிப்பவர்களாயின் நீதிமன்றத் தீர்ப்பு இப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். எனினும் அவர்கள் அவ்வாறு மதிப்பளிப்பவர்கள் அல்ல என்பதாலேயே இதனைக் கூறுகின்றோம்.
இப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதொன்றேயாகும். அரசியல் சிக்கல் நிலை உருவாகுவதற்குக் காரணமாக அமைந்திருந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். அதுவே சிக்கல் நிலைக்கு நிரந்தர தீர்வாகும் என்றார்.