நாட்டிலுள்ள 15 சிறைச்சாலைகளில், கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையையடுத்து, 115 அலைபேசிகள் மற்றும் சட்டவிரோத உபகரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளின் புலனாய்வுப் பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, 127 சிம் அட்டைகள், 57 அலைபேசி பற்றரிகள், 27 சார்ஜர்கள் மற்றும் சிறியளவிலான 116 போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டனவென, அமைச்சின் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வாறான பொருட்கள், கொழும்பு மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலேயே அதிகம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை சிறைச்சாலையில், 17 அலைபேசிகளும், 13 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் இரவு பகலாக, புலனாய்வு அதிகாரிகள் கண்னாணித்து வருகின்றனரென, அமைச்சின் உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.