திறமையானவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை!- ரெஜினோல்ட் குரே

239 0

திறமையானவர்கள் நல்ல வேலை தெரிந்தவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை என தெரிவித்த வடமாகாண ஆளுநர் .ரெஜினோல்ட் குரே அரசாங்கத்தில் வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் இணைந்த பின் எப்போது நாம் ஓய்வூதியம் எடுப்போம் என்று நினைத்துக்கொண்டே பணிபுரிகின்றனர் இதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடிவதில்லை எனத் தெரிவித்தார்.

 

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

இந்த தற்காலிக உலகத்திலே ஒன்றுமே நிரந்தரம் இல்லை ஆனால் நிரந்தரமான வேலை வேண்டும்   நிரந்தரமான குடும்பம் வேண்டும் என அனைவரும் நிரந்தரமானது வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் எல்லோரும் நிரந்தர அரசாங்க வேலை வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் காரணம் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்த்தால் நாங்கள் நிறைய வேலை செய்ய வேண்டும் நாங்கள் சரியாக வேலை செய்ய முடியாது போனால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் ஆனால் அரச சேவையில் அவ்வாறு இல்லை பல வசதிகளை தருகின்றது ஓய்வூதியம் இருக்கின்றது அதனால் தான் அனைவரும் நிரந்தர அரசாங்க வேலை வேண்டும் என்று விரும்புகிறார்கள்

திறமையானவர்கள் நல்ல வேலை தெரிந்தவர்கள் கெட்டிக்காரர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை. என்பதை  நான் பார்த்திருக்கின்றேன்

வைத்தியர்களாக இருக்கட்டும் ஆசிரியர்களாக இருக்கட்டும் சட்டத்தரணிகளாக இருக்கட்டும் தனியாக ஒரு நிறுவனத்தை துவங்கி நிறைய சம்பாதிக்கிறார்கள் ஆனாலும் ஓய்வூதியம் கிடைக்கும் என்ற ஒரு காரணத்தால் பலர் அரசாங்க வேலையை விரும்புகின்றார்கள்.

அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் நீங்கள் அனைவரும் மக்களுடன் சினேகபூர்வமாக சேவை செய்ய வேண்டும் வீட்டில் உங்கள் பிரச்சனைகளை வீட்டில் வைத்துவிட்டு அலுவலகத்தில் மக்களுடன் சந்தோசமாக வேலை செய்யுங்கள் உங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மக்களின் பணம் அது என்னுடைய பணமோ ஜனாதிபதியின் பணமோ அல்ல அது மக்களுடைய பணம்

உங்களுக்கு தலைவர்கள் யார் அது மக்கள் மக்கள் தான் உங்களுடைய தலைவர் எனவே அவர்களுக்கு நீங்கள் சிறந்த சேவையாற்றவேண்டும் என்று நான் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.என்றார்.

Leave a comment