எமது தலைவரை கொலை செய்ய சதி செய்த ரணில் விக்ரமசிங்கவுடன் செல்லம் கொஞ்ச முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டங்களில் ஐ.தே.க.யை மட்டுமே எதிர்த்து வருவதாகவும், ஏனைய கட்சிகள் குறித்து எந்தவித கருத்தும் வெளியிடப்படுவதில்லையெனவும் கூறப்படுகின்றதே என அவரிடம் வினவியதற்கே அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சிதான் தற்பொழுது எமது பொது எதிரியாகும். அவர்களுடன் எமக்கு உறவு கொண்டாட முடியாது. ஐ.தே.கட்சிக்கு தமது உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே இடத்துக்கு கூட்டிக் கொள்ள முடியாத ஒரு நிலைமை உள்ளது.
ஜனாதிபதி செயலகத்தை சூற்றிவளைப்பதாக கூறினர். அரச நிறுவனங்களை ஆக்கிரமிக்கப் போவதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரையில் எந்தவொன்றும் நடைபெறவில்லை. இதிலிருந்து ஐ.தே.க.யின் தோற்றம் விளங்குகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.