ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான யோசனை ஒன்றை எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 19 ஆவது திருத்தத்தில் என்ன குறைபாடுகள் உள்ளது என்பது தற்போதைய கேள்வியாகும். 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை தமது எண்ணத்தின் அடிப்படையில் பதவி நீக்க முடியாது. அமைச்சர்களை நியமிக்க முடியாது. சட்டமா அதிபர், நீதியரசர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்களை நியமிக்க முடியாது. இவை மக்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.இதன் மூலம், தனிநபர் மேலாதிக்கத்திற்கு இடமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.