இனவாதத்திற்கான கணிதச் சமன்பாடு கண்டுபிடித்த ஐக்கிய தேசிய கட்சி

409 0

vasuV2 + U = 0 என்பதன் மூலம் இனவாதத்தை பரப்பும் சிலரை அறிந்து கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார கூறுகின்றார்.

V2 என்பது விக்னேஸ்வரன் மற்றும் வாசுதேவ என்றும் ரு என்பது உதய கம்மன்பில என்றும் கூறிய அவர், அவற்றின் கூட்டுத் தொகை 0 என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

விக்னேஸ்வரனின் இனவாத பேச்சை ஐக்கிய தேசிய கட்சி முற்றாக கண்டிப்பதாகவும், விக்னேஸ்வரன் என்பவர் வாசுதேவவின் மைத்துனன் என்றும் கூறிய அவர், வடக்கின் முதலமைச்சராகி கொழும்பில் இருக்கும் விக்னேஸ்வரன் இரவு நேரங்களில் வாசுதேவவுடன் ஒன்றாக கோப்பி அருந்திக் கொண்டு இனவாத சதி செய்வதாகவும் நலீன் பண்டார கூறினார்.

இவர்கள் இருவரும் இணைந்து வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டுவதற்கு சதி செய்வதாகவும் கூட்டு எதிர்க்கட்சிக் கும்பல் கரைசேருவதற்கு இனவாதம் அல்லாமல் வேறு வழிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஒருபோதும் தற்போதைய அரசாங்கம் முழந்தாளிடப் போவதில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார கூறுகின்றார்.