சதிகாரர்களின் புகழிடமாக அலரிமாளிகையை ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.
இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைக் கூறியுள்ளார்.
பதவி நீக்கப்பட்ட பிரதமர் ஒருவர் சட்ட விரோதமாக அலரிமாளிகையைப் பயன்படுத்தி வருவது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். இவ்வாறு சட்ட விரோதமாக பயன்படுத்திய நிலையில் வெளிநாட்டு தூதுவர்களை அங்கு கூட்டி நாட்டுக்கு எதிராக சதி செய்வது அநாகரிகமான ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.