அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு காணப்பட்ட சர்வாதிகார அதிகாரத்தை மீண்டும் தன்னகப்படுத்திக்கொள்வதற்காக முயற்சிகளை மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார் என குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழிக்க ஒரு போதும் இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
19 ஆம் சீர்த்திருத்தத்தினூடாக ஜனாதிபதிக்கு ஏற்றவகையில் தன்னிச்சயான தீர்மானங்களையோ, தான் நினைக்கும் சந்தர்ப்பத்தில் பிரதமரை பதவி நீக்கவோ, அமைச்சர்களை நியமிக்கவோ, நீதியரசர்களை நியமிக்கவோ,பொலிஸ் அதிகாரிகளை நிமிக்கவோ, பாராளுமன்றத்தை கலைக்கவோ, பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவோ முடியாது.
நியமனங்கள, பதவி நீக்கம் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி பிரதமர் உட்பட முழு பாராளுமன்றத்தின் அனுமதியினை பெற்றதன் பின்னர் செயற்பட முடியும் என்றார்.