ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

266 0

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 26ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று ஈவா வணசுந்தர, எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணை தனது சேவையாளரான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கிடைக்காத போதிலும் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வழக்கிற்கு காரணமாக உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து அடங்கிய இருவெட்டு தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றத் வழக்கை பெப்ரவரி 26ம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

Leave a comment