முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாக வே பார்க்கின்றேன்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்திலிருந்து எங்களது போராட்ட தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக சிலர் செயல்படுகிறார்களோ என்று என்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தேன். பலர் பணத்தை வெளியிலே இருந்து கொடுத்து அவரவர் இடத்தில் சில நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.
இவை அனைத்தும் அலசி ஆராயப்பட வேண்டியவை. தங்களிடையே ஒரு சுமுகமான நிலையில் வாழும் ஒரு போராளிகளை இன்று ஒரு அச்ச நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது வெளிப்படையான உண்மை. அந்த விடயத்தை முன்னெடுப்பவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை கைவிட வேண்டும். என்பதையே நான் கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.