இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

316 0

இந்தோனேசியாவில் இன்று 5.5. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் அதிர்ந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது.  நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a comment