புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்கள் அடிப்படையற்ற ஒரு வாதத்தையே முன்வைக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
அண்மையில் வெளியாகிய நீதிமன்றத் தீர்ப்பின்படி பிரதமரினதும், அமைச்சர்களினதும் செயற்பாடுகளே இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது அல்லாமல் அவர்களைப் பதவி நீக்கம் செய்யப்பட வில்லை.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள உடன்படிக்கை என்னவென்பதை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் உதய கம்மம்பில எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.