தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு இந்திய உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன் தமிழகத்துக்கு காவிரி நதிரை செப்டம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இருப்பினும் அந்த உத்தரவிற்கமைய கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.
பின்னர் கர்நாடக அணைகளில் உள்ள நீரானது குடிநீர் தேவைக்கு மாத்திரமே இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என தெரிவித்து உயர் நீதிமன்றில் கர்நாடக அரசு மேல் முறையீட்டு செய்தது.
இதனிடையே, கர்நாடக அரசுக்கு எதிராகவும் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 30 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.