இடைக்கால அரசாங்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்காதிருந்திருந்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களக்கு மஹிந்த ராஜபக்ஷ நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியினர் ஒருபோதும் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கமாட்டார்கள் எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தல் ஒன்றே தீர்வு எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.