தேர்தலை நடத்த சட்டபூர்வமான அரசு வேண்டும்-ரணில்

300 0

“ஜனாதிபதி நினைத்தபடி தான் தோன்றித்தனமாக பிரதமரை நியமிக்க முடியாது பாராளுமன்ற பெரும்பான்மை உள்ளவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் முதலில் சட்டபூர்வமான அரசு என்று ஒன்று வேண்டும் அதன் பின்னரே பாராளுமன்றில் தேர்தல் நடத்துவதற்கான விஷேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார்.

மேலும் சர்வாதிகாரியாக நடக்காமல் அரசியலமைப்பை பின்பற்றுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Leave a comment