நாட்டின் நிர்வாகத் தலைவரான ஜனாதிபதிக்கு அமைச்சரவை ஒன்றில்லாது அமைச்சுக்களின் செயலாளர்களோடு நாட்டை பரிபாலனம் செய்ய கிடைத்திருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்” என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரர் வைத்தியர் ப்ரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலை குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ப்ரதீபா மஹானாமஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவையடுத்து பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அவர்களுடைய பதவியில் செயற்பட முடியாது. இதனால் ஜனாதிபதிக்கு அமைச்சுக்களின் செயலாளர்களோடு இனைந்து நாடடின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நேர்ந்துள்ளது.
நாட்டின் அரசியல் குழப்ப நிலை தொடர்பாக மேன் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந் நிலையில் நாட்டின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் தொடர்பாகவும் மேன் முறையீட்டு நீதிமன்றிலேயே ஆலோசனை பெறலாம்.
மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவானது ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் பிரதமராக செயற்பட ஏற்றுக் கொள்ளுதல் என பொருள் படாது. எது எவ்வாறிருந்த போதும் இந்த இடைக்கால தடையுத்தரவின் காரணமாக பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அவர்களது அமைச்சுப் பொறுப்புக்கள் கடமைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.