பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அவ்வந்த பதவிகளில் செயற்பட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக ஈஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் மஹிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்த பதவிகளை இனி மேலும் தொடர்ந்தால், அது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்கவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் அப்பதவியைத் தொடரவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.