ஜனாதிபதிக்கு இரண்டே இரண்டு தெரிவுகள் தான் உள்ளது!- விஜேதாஸ ராஜபக்ஷ

267 0

“புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது அல்லது பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாது நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே நடத்திச் செல்வது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்” என விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

“பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத் தீர்ப்பில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை மட்டுமே பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதிக்கு இங்கு இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன. ஒன்று பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாது தானே தனி ஒரு நபராக அரச நடவடிக்கைகளை முன் நடாத்திச் செல்லுதல்.

இரண்டாவது தற்போதுள்ள பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது ஆகிய இரண்டு தெரிவுகள் மாத்திரமே உள்ளது.

அவ்வாறு புதிய பிரதமரை நியமிக்கின்ற பட்சத்தில் ஜனாதிபதியால் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்க முடியாது.

ஆனால் அந்த அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை மீண்டும் புதிய அமைச்சரவையில் நியமிக்கலாம்” என விஜதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment