நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பணச்சலவை சட்டத்தின் கீழ், கிங்ஸி வீதியில் வீட்டுக் கொள்வனவுக்காக பயன்படுத்திய 270 லட்சம் ரூபாய்க்கு உரிய கணக்குகளை காட்டத் தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன்படி அவர் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதில் 53 லட்சம் ரூபாய்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில், இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீர பிணைகளிலும் சிறையில்இருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.