பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை-ரஞ்சித் மத்தும

286 0

பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள அணியே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார , பெரும்பான்மைக்கு இடமளித்தால் மாத்திரமே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையை சீர்படுத்த முடியும். பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வலியுறுத்தலை ஜனாதிபதிபக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினர்  மகாநாயக்கர்கிளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டியில் மகாசங்கத்தினரை இன்று  திங்கட்கிழமை சந்தித்தித்ததோடு , ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கெண்டனர். மேலும் இதன் போது தற்போது நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, பாலித ரங்கே பண்டார, ஜெ.சி. அலவதுவல, தலதா அதுகோரல்ல மற்றும் சந்ராணி பண்டார உள்ளிட்டோர் இதன் போது கலந்தக்கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித்தமத்தும பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment