ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஏக மனதாக தீர்மானித்துள்ளனர்.
மேலும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமாராக ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு எவரையும் பிரதமராக தெரிவு செய்யப்போவதில்லையென்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பினை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் பெரும்பான்மையை பெற்ற கட்சியின் தலைவரே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என்றும் இந்த விடயமே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் அறிவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போதே இந்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.