கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர், இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சை நிலையங்கள் மற்றும் விடைத் தாள் சேகரிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் விசேட பொலிஸ் பாதுகாப்புகள் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.