எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்-நிஷாந்த டி சில்வா

551 0

எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

“எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவர் குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன்.

அத்­துடன் நான் மனிதத் தன்­மையை மதிக்­கி­றேனே தவிர நபர் ஒரு­வரின் இனத்­துக்கு அல்ல. எனது கட­மையின் போது கட்சி, நிற, இன, மத பேதங்கள் இல்லை. அனை­வரும் மனி­தர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நான் சேவை செய்­கின்றேன்.

எனது பிறப்பு சான்­றி­தழில் எனக்கு சிங்­க­ளவர் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் நான் மனித இனத்­திற்கே உரி­மை­யா­கின்றேன். சிங்­களம், தமிழ், முஸ்­லி­மாக இருப்­ப­தற்கு முன்னர் அனை­வரும் மனி­த­னாக இருப்போம். அத்­துடன் நான் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மன­ச்சாட்­சிக்கு உண்­மை­யா­கவும், நாட்டின் சட்­டத்­திற்­க­மை­யவும் செயற்­ப­டு­கிறேன். இனி­மேலும் அப்­படித் தான் செயற்­ப­டுவேன்.

எனது கடமை தொடர்பில் பலர் கோப­ம­டை­கின்­றார்கள். அது குறித்து நான் அதிர்ச்சியடைவதில்லை” எனவும் நிஷாந்த டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment