
இந்த நிலையில், சென்னையில், பெட்ரோல், டீசல் விலை முறையே 31 மற்றும் 39 காசுகள் குறைந்துள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.63 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 70.38 ஆகவும் விற்பனையாகிறது.
கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலாய் அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணைய் அமெரிக்க டாலர் மதிப்புக்கு 60 -க்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.