ஜனநாயக கட்டமைப்பொன்றிற்குள்ளேயே தேர்தல்கள் நடைபெறமுடியும் என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர்காசிம் தெரிவித்துள்ளார்
தற்போதைய நெருக்கடிக்கு தேர்தலே தீர்வு என மகிந்த ராஜபக்ச அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
தேர்தல்களை இடம்பெறவேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியதேசிய கட்சி மக்களின் கருத்தை அறிவதற்கு என்றுமே அச்சமடைந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இவையனைத்திற்கும் முன்பாக நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கம் ஏற்படவேண்டும் என ஹபீர்காசிம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள தரப்பினர் அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரே தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.