தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகப்போராளிக் கட்சி உறுப்பினர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுமதிகேட்டு அஞ்சலி செலுத்தியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொலைபேசிமூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்புகொண்டபோது அஞ்சலி நிகழ்வு நடாத்தலாம் எனவும் விடுதலைப்புலிகளின் தேசியக் கொடி மற்றும் இலச்சினைகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது எனவும் ரணில் விக்கிரமசிங்கவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக மாவை சேனாதிராசா ஜனநாயகப் போராளிகளுக்கும் தெரியப்படுத்தியதையடுத்தே, தமிழரசுக் கட்சியும், ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்து தியாகி லெப்.கேணல். திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர் எனவும் தெரியவந்துள்ளது.