சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக 450 பட்டதாரிகளுக்கு நாளை(03) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.விரசூரிய தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் சிங்கள பாடசாலைகளின் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்வதை கருத்திற் கொண்டு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய மாகாண கல்வி அமைச்சின் ஊடாக அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த மாதம் அதற்கான நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்ட 450 பட்டதாரிகளுக்கு நாளை(3) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளது
மேற்படி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை(3) சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கவின் தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி ஆசிரியர் நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் அவர்களின் நியமனக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி அந்தந்த பாடசாலைகளுக்கு சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவை மாற்றப்படமாட்டாது என்றும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.விரசூரிய மேலும் தெரிவித்தார்.