மஹிந்த – அத்துரலிய ரத்ன தேரர் சந்திப்பு

333 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜகிரிய பௌத்த மத்திய நிலையத்துக்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருடன் பிரதமர் 20 நிமிட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து பின்னர் தேர்தலுக்கு செல்வது அத்துரலிய ரத்ன தேரரின் கருத்தாக காணப்படுகின்றது. தற்பொழுது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென தீர்மானமான பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி பறிபோகப் போகின்றது என்பது உறுதியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியுள்ளமையை சீரனிக்க முடியாத தென்னிலங்கை தீவிர அரசியல் சக்திகள் தற்பொழுது இடைக்கால அரசாங்க யோசனையை வலியுறுத்தி வருகின்றன.

நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment