ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இரண்டாவது தடவையாகவும் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு (30) ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களே இச்சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவேண்டிய தேவை உருவானால் தான் அவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆராய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உரையொன்றில் தெரிவித்துள்ளார்.
தான் ரணில் விக்கிரமசிங்கவுடன் மாத்திரம் ஒருபோதும் இணைந்து பணியாற்றப் போவதில்லையென்பதை நேற்றும் ஜனாதிபதி உறுதிபடக் கூறியுள்ளார். இந்நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறப் போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.