சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நல்லதண்ணி, மோகினி எல்ல பகுதியில் வீதி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியானது சுமார் ஒரு வருட காலம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கு அகற்றப்படும் மண் திட்டுகளை மவுசாக்கலை ஓயாவிற்கு அருகாமையில் கொட்டப்படுவதால் மழை நாட்களில் அந்த மண் மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு சென்றடைவதால் நீர்த்தேக்கத்தின் கொள்ளவு குறைய வாய்ப்புள்ளமையால் அதனை உடனடியாக வேறு இடங்களில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் இந்த திருத்தற் பணிகள் குறித்து வாகன சாரதிகள் கூறுகையில்,இப்பாதையை அகலப்படுத்துவது சாலச்சிறந்த விடயமாகும்.
ஆனால் இப்பணியை விரைந்து செய்திருக்க வேண்டும்.இப்போதே இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் அப்பாதையைப் பயன்படுத்த முடியாது அவ்வாறு இருக்கையில் பருவகாலம் ஆரம்பித்தவுடன் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் அப்போது ஏற்படும் வாகன நெரிசலை எவ்வாறு தடுக்க முடியும்.அதனால் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.