அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

367 0

anurathapuraஅனுராதபுரச் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரும் கடந்த 21ஆம் திகதியிலிருந்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தாம் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை தமிழ்ப் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் கைதிகளின் கோரிக்கைக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை சாதகமான பதில்கள் எவையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் தமக்கு காத்திரமான பதில் வரும்வரை தாம் தொடர்ந்து போராடப்போவதாக கைதிகள் அறிவித்துள்ளனர்.