ஐக்கிய தேசிய கட்சியின் நீதிக்கான பேரணி இன்று கொழும்பில் இருந்து ஆரம்பமானது. அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இந்தப் பேரணி ஆரம்பித்து வைக்கப்பட்டு, வெுந்தரை வரையில் பேரணி செல்லவுள்ளது.
இந்த வாகனப் பேரணி மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, அம்பலாங்கொட, காலி, வெலிகம, மாத்தறை ஊடாக தெவுந்தரை வரை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனப் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் உட்பட ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இன்று பேரணியை ஆரம்பிக்கும் முன்னதாக கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின் சத்தியாக்கிரக போராட்டத்திலும் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.