தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியவரும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் லங்காதீப என்ற நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னனர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அடையாள அட்டையையும், அவரது இலக்கத் தகட்டையும் கொழும்புக்கு அனுப்பிவைக்குமாறு நான் உத்தரவிட்டேன்.
எனினும், அது அனுப்பிவைக்கப்பட்டதா என்பது குறித்து எனக்கு இதுவரை எதுவும் தெரிந்திருக்கவில்லை.பிரபாகரனின் அடையாள அட்டையை மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவே வைத்திருக்கிறார் என்பதை அவர் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய பின்னர் தான் எனக்குத் தெரியும். அதனை இராணுவ அருங்காட்சியகத்துக்கு வழங்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அடையாள அட்டையை நான் கொழும்புக்கு அனுப்பச் சொல்லியும் இதுவரை காலமும் அனுப்பாமை தொடர்பாக கமால் குணரட்ண மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய இராணுவத் தளபதியிடம் கோரவுள்ளேன்.
அத்துடன், நடந்திக்கடலுக்கான பாதை எனும் நூலில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்தச் சிறு குழந்தையாலும் கண்டுபிடிக்க முடியும் என கமால் குணரட்ண எழுதியிருந்தார்.
எனவே, அதனை ஆதாரத்துடன் செய்யவேண்டியிருந்தது. இராணுவத்தில் இருந்த எவருமே பிரபாகரனை நேரில் கண்டதில்லை. அதனால் தான் பிரபாகரனின் உடலை அடையாளம் காண கருணாவை அனுப்பிவைத்தேன்.அதுமாத்திரமன்றி, பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.’ என்றும் அவர் கூறியுள்ளார்.