பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தடையின்றி உரம் விநியோகம்!

299 0

எட்டு இலட்சம் ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 2018/2019 ஆம் ஆண்டுக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கு அவசியமான அனைத்து உரங்களையும் தடையின்றி பெற்றுக் கொடுக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மானிய அடிப்படையில் வழங்கப்படும் உரம் மற்றும் தற்போது உரங்களுக்கு ஏற்பட்டுள்ள தேவை ஆகியவற்றை ஆராயும் கூட்டம் அமைச்சில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திரவும் கலந்து கொண்டார். இதன்போதே அமைச்சர் மேற்படி பணிப்புரையை விடுத்தார்.

தேவைப்படும் உரங்கள் ‘லக்’ மற்றும் ‘கொமர்ஷல்’ ஆகிய உரச்சங்கங்களில் போதுமானளவு கையிருப்பில் வைக்குமாறும் விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைய விவசாயிகளின் உரத் தேவைகளை நிறைவு செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

இம்முறை பெரும்போகத்துக்கு 37,500 மெற்றிக்தொன் யூரியா, 46 ஆயிரம் மெற்றிக்தொன் எம்.ஓ.பி உரம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக்தொன் டி.எஸ்.பி உரம் என்பன தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

Leave a comment